ஆஸ்கர் விருது இறுதிபட்டியலில் இடம் பிடித்தது 'நாட்டு நாட்டு பாடல்'!

ஆர்ஆர்ஆர்  'நாட்டு நாட்டு பாடல்'
ஆர்ஆர்ஆர் 'நாட்டு நாட்டு பாடல்'ஆஸ்கர் விருது இறுதிபட்டியலில் இடம் பிடித்தது 'நாட்டு நாட்டு பாடல்'!

ஆர்ஆர்ஆர் தெலுங்கு படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலாக ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தை லைகா, பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை இணைந்து தயாரித்தன. கடந்த மார்ச் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான கோல்டன் க்ளோப் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படம் இரண்டு பிரிவுகளின் நாமினேட் ஆகியது. இதில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த `நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை வென்றது.

இந்த நிலையில், 'ஹாலிவுட்' திரைப்படங்களுக்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2023, மார்ச் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இதில் ஆஸ்கர் விருதுக்காக பல்வேறு பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்களின் தேர்வு பட்டியல் இறுதி செய்யப்பட்டு தேர்வு கமிட்டி நேற்று அறிவித்தது. இதில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய தெலுங்கு திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தில் கீரவாணி இசையில் இசையில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாட்டு,சிறந்த 'ஒரிஜினல் சாங்' எனப்படும் பாடலுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுதவிர சிறந்த ஆவணப்படமாக தி எலிபென்ட் விஸ்பர்ஸ் படமும் தேர்வாகி உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in