வெளியானது `நானே வருவேன்' படத்தின் டீசர்: அதிரடி காட்டும் தனுஷ்

வெளியானது `நானே வருவேன்' படத்தின் டீசர்: அதிரடி காட்டும் தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்துள்ள `நானே வருவேன்' படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ‘காதல்கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற மாஸ்ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. ஹீரோ, வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் கடந்த 7-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவையும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர். ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘வீரா சூரா’ என்ற பாடலை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவே பாடி உள்ளார்.

இந்நிலையில், படத்தின் டீசரை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியாகிய சில நிமிடங்களில் 11 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது. இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in