‘வீரா சூரா வாடா’ - தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘வீரா சூரா வாடா’ - தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ‘காதல்கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற மாஸ்ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. ஹீரோ, வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘வீரா சூரா’ என்ற பாடலை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவே பாடி உள்ளார். 3.31 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடலின் லிரிக் வீடியோவில் வில் அம்புடன் தனுஷ் ஜாலம் செய்கிறார். செல்வராகவனின் பாடல் வரிகளுடன், யுவன் சங்கர் ராஜாவின் குரலுடன் ‘காடெல்லாம் உன் அரசாங்கம்’ பாடலின் ஹைப்பை ஏற்றுகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவையும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர். மிக பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் இந்தப் படமும் இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in