'நானா தாய் கிழவி?': ரசிகரிடம் கொந்தளித்த பிரபல நடிகை

'நானா தாய் கிழவி?': ரசிகரிடம் கொந்தளித்த பிரபல நடிகை

நடிகை நித்யா மேனனை ஒரு ரசிகர் தாய் கிழவி என்று அழைத்தார். தனக்கு அந்தப்பெயர் பிடிக்காது என்று நித்யாமேனன் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, நடிகர் தனுஷ் பாடிய என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என்ற பாடலில் தாய் கிழவி வரிகள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நித்யாமேனன் ரசிகர்களுடன் நேற்று உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நித்யாமேனனை தாய் கிழவி என்று அழைத்தார்.அதற்கு, தயவு செய்து என்னை அப்படி அழைக்காதீர்கள். அந்த தாய்கிழவி என்ற பெயர் எனக்கு பிடிக்காது. எனவே, இனிமேல் அப்படி கூப்பிடாதீர்கள் என்று நித்யாமேனன் கூறினார்.

சரத்குமார், குஷ்பு நடிப்பில் உருவான 'நாட்டாமை' படத்தில் ஈரோடு சௌந்தர் எழுதிய தாய் கிழவி வசனத்தை வில்லன் நடிகர் பொன்னம்பலம் பேசியிருப்பார். இந்த வார்த்தையைக் கொண்டு தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ஒரு பாடல் புகழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in