`நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பட டிரெய்லருக்கு குவியும் நெகடிவ் கமென்ட்ஸ்!

`நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பட டிரெய்லருக்கு குவியும் நெகடிவ் கமென்ட்ஸ்!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பட டிரெய்லருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவின் கம்பேக் படமாக ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ அமைந்திருக்கிறது. லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் சுராஜ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லே, ஷிவானி உள்ளிட்டப் பல நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் படத்தின் டிரெய்லர் வெளியானது. நாய் கடத்தும் கும்பலின் தலைவனாக வடிவேலு நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் படத்தில் வடிவேலு பேசியிருக்கும் வசனங்கள், அவரது நடிப்பு என அனைத்து விஷயங்களும் சுவாரஸ்யமில்லாத வகையில் அமைந்துள்ளதாக பரவலான விமர்சனத்தை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, ’’நாய் சேகர்’ தலைப்புக்காக நடிகர் சதீஷிடம் வடிவேலு சண்டைப் போட்டிருக்கிறார். அப்படி தமிழ் சினிமாவுக்கு ரிட்டர்ன் ஆகியுள்ள அவரது நடிப்பும் கதையும் படத்தில் சுவாரஸ்யமாகவே இல்லை’ என்ற ரீதியில் கமென்ட்கள் வந்து கொண்டிருக்கின்றனர். யூடியூப் தளத்தில் அதிகளவிலான நெகடிவ் கமென்டுகள் படத்தின் ஓப்பனிங்கை பாதித்து விடும் என்று கருதி படக்குழு யூடியூபில் கமென்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in