‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ மோஷன் போஸ்டர் வெளியானது

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் திரைப்படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ திரைப்படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரம் நாய்சேகர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு ‘நாய்சேகர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதும், நடிகர் சதீஷ் அதே பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியானது.

வடிவேலு திரைப்படத்துக்கு இந்தத் தலைப்பை விட்டுத்தரக் கோரி, சதீஷ் நடிக்கும் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிய வடிவேலு திரைப்படத்துக்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. நேற்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்த நிலையில், இன்று இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in