ஓடிடியில் வெளியாகிறது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’!

ஓடிடியில் வெளியாகிறது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’!

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

சுராஜ் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, ஆனந்த்ராஜ், ஷிவானி நாராயணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சினிமாவில் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரைலர் வெளியான நாளில் இருந்தே படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது.

படம் வெளியான பிறகும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 6ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை நெட்ஃபிளிக்ஸ் தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது. ’வந்துட்டான்யா வந்துட்டான்யா’ என்ற கேப்ஷனுடன் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வருகிற ஜனவரி 6ம் தேதி வெளியாகிறது எனத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in