‘நாய் சேகர்’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ்!

‘நாய் சேகர்’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ்!

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சதீஷ், நாயகனாக நடித்துள்ள ’நாய் சேகர்’ திரைப்படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

நாடு முழுக்க அதிகரித்து வரும் கரோனா தொற்றால், பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதனால், பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த புதிய திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் அஜித்குமார் நடித்துள்ள ’வலிமை’, ராஜமெளலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ’ராதே ஷ்யாம்’, விஷால் நடித்துள்ள ’வீரமே வாகை சூடும்’ படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே சசிகுமார் நடித்துள்ள ’கொம்புவச்ச சிங்கம்டா’ படம் ஜன.13 அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

மேலும், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள ’நாய் சேகர்’ படமும் ஜன.13 அன்றே வெளியாக இருக்கிறது. கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘குக்வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. அந்த நாய்க்கு நடிகர் சிவா டப்பிங் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.