ராம் படப்பிடிப்புக்கு மிஷ்கின் திடீர் விசிட்

மிஷ்கின், நிவின் பாலி, சுரேஷ் காமாட்சி, சூரி, ராம்
மிஷ்கின், நிவின் பாலி, சுரேஷ் காமாட்சி, சூரி, ராம்

ராம் இயக்கும் படத்தின் ஷூட்டிங்குக்கு திடீரென்று வந்த இயக்குநர் மிஷ்கின், பிரம்மாண்ட ரயில்வே ஸ்டேஷன் செட்டைப் பார்வையிட்டார்.

மம்முட்டி, அஞ்சலி உட்பட பலர் நடித்த ’பேரன்பு’ படத்தை அடுத்து, ராம் இயக்கும் படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார். அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். சூரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புவின் ’மாநாடு’ படத்தைத் தயாரித்துள்ள சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

நிவின் பாலி, சூரி
நிவின் பாலி, சூரி

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தனுஷ்கோடியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பிறகு குமுளியில் நடந்தது. இப்போது, சென்னை அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக ரெட் ஹில்ஸ் அருகே ரூ.1 கோடி செலவில், ரயில்வே ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்புக்கு இயக்குநர் மிஷ்கின் திடீர் விசிட் அடித்தார். அமைக்கப்பட்டிருந்த ரயில்வே ஸ்டேஷன் அரங்கையும் படப்பிடிப்பையும் அவர் பார்வையிட்டார். பின்னர் படத்தின் ஹீரோ நிவின்பாலி, நடிகர் சூரி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரிடம் படம் பற்றிப் பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in