‘விருமன்’ திரைப்படத்தில் நடிக்கும் மைனா நந்தினி

‘விருமன்’ திரைப்படத்தில் நடிக்கும் மைனா நந்தினி

சின்னதிரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. சினிமாவிலும் ஒரு சில படங்களில் சின்னசின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்த மைனா நந்தினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கொம்பன் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ திரைப்படத்திலும் மைனா நந்தினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின்போது காரத்தியடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் மைனா நந்தினி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in