என் இயக்கத்தில் நடிக்க என் மகன் மறுத்தான்: தங்கர்பச்சான்

என் இயக்கத்தில் நடிக்க என் மகன் மறுத்தான்: தங்கர்பச்சான்
டக்கு முக்கு டிக்கு தாளம் பாடல் வெளியீட்டு விழா

``என் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று என் மகன் விஜித் பிடிவாதமாக இருந்தான்'' என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்தார்.

பிஎஸ்என் தயாரிப்பில், தங்கர் பச்சான், தன் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும், `டக்கு முக்கு டிக்கு தாளம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், மிலனா நாகராஜ், அஸ்வினி, மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தரண்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரபு தயாளன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு சென்னையில் நடந்தது.

இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, வெற்றிமாறன், பேரரசு, யூகி சேது, நடிகர் ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் நாசர், ஆரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கஸ்தூரிராஜா, விஜித் பச்சான், வெற்றிமாறன், தங்கர்பச்சான்
கஸ்தூரிராஜா, விஜித் பச்சான், வெற்றிமாறன், தங்கர்பச்சான்

விழாவில் இயக்குநர் தங்கர் பச்சான் பேசும்போது, ``டக்கு முக்கு டிக்கு தாளம் மாறிக் கொண்டே இருக்கும். அதுதான் இப்படம். ஒருவனிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால், அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் பணம் கையில் இல்லை. அவர்கள் என்னவாகிறார்கள் என்பது இந்தப்படத்தின் கதை. நான் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன். சிறு வயதில் எந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இருக்கிறதோ அந்த படத்திற்குத்தான் செல்வேன். அப்படித்தான் சினிமா வளர்த்தெடுத்தது.

என் மகன் விஜித் என் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான். இல்லையென்றால் 6 வருடங்களுக்கு முன்பே நடிக்க வைத்திருப்பேன். பல பேரிடம் கதைகளை கேட்டான். அதில் சில படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறது. சில படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக இதில் நடித்தார்'' என்றார்.

Related Stories

No stories found.