`என் ஆருயிர் நண்பர் இறந்துவிட்டார்'- சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான வீடியோ

`என் ஆருயிர் நண்பர் இறந்துவிட்டார்'- சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான வீடியோ

நடிகர் பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

அழியாத கோலங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பிரதாப் போத்தன். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலை திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதாப் போத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சத்யராஜ் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய சத்யராஜ், "என் ஆருயிர் நண்பன், மிகச் சிறந்த இயக்குநர், அற்புதமான நடிகர் பிரதாப் போத்தன் மறைவுக்கு எந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் ஜீவா, மகுடம் ஆகிய படத்தில் நடத்தேன். இந்த இரண்டு படத்திலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அவருடன் இருந்தால் பொழுது போகிறதே தெரியாது. குழந்தை மாதிரி மனசு. எப்பாேதும் கலகல என்று சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் மறைந்துவிட்டார் என்று திடீர் செய்தி வந்தது அதிர்ச்சியாக இருந்தது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையிருக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கலில், "தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் பிரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in