`என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்’: நடிகர் ஆர்கே

`என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்’: நடிகர் ஆர்கே

``தியேட்டர்களுக்காக மட்டுமே படம் எடுக்கிறேன்'' என்று நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. கூறியுள்ளார்.

’எல்லாம் அவன் செயல்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.கே. தொடர்ந்து, ’என் வழி தனி வழி’, ’வைகை எக்ஸ்பிரஸ்’ உட்பட சில படங்களில் நடித்த அவர், பிசினஸ்மேனாகவும் இருக்கிறார். கைகளில் ஒட்டாமல் டை அடிக்கும் பிரச்சினைக்கு புதிய தீர்வாக, இவர் கண்டுபிடித்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இவருக்கு பல்வேறு விதமான அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது.

இவரது இந்த கண்டுபிடிப்பை பாராட்டி மலேசியா, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலம் 18 முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மலேசியாவில் வழங்கப்படும் உயரிய விருதான டத்தோ ஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எப்போதும் சினிமாவில் என் கவனம் இருந்துகொண்டுதான் இருக்கும். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கரோனா தாக்கம் காரணமாக படங்கள் எடுக்க முடியாத சூழல் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் அடுத்த பட பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறேன். என் படங்கள் தியேட்டர்களில் தான் வெளியாகும்’ என்றார்.

இவர், குறட்டை பிரச்சினைக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் இந்த தயாரிப்புக்கு காப்புரிமை கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in