என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது: நடிகை குஷ்பு கண்ணீர்

என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது: நடிகை குஷ்பு கண்ணீர்

நடிகையும், பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் இன்று மரணமடைந்தார்.

தமிழ் திரைப்படங்களில் 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், சரத்குமார் போன்றோருக்கு ஜோடியாக நடித்து பிரபமானவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி.யுடன் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறார்.

அபுபக்கர்.
அபுபக்கர்.

தற்போது நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடித்து வரும் குஷ்பு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது மூத்த சகோதரன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும், அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த நான்கு நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த குஷ்புவின் சகோதரர் அபுபக்கர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து, எனது சகோதரர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என குஷ்பு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறிருப்பதாவது: உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in