
‘பத்துதல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நடிகர் சிலம்பரசன் சென்னை வந்துள்ளார்.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, பிரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன் உள்ளிட்டப் பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்துதல’. இந்த மாத இறுதியில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. மேலும், இதன் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் 18-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக நடிகர் சிம்பு இன்று சென்னை வந்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாய்லாந்தில் மார்ஷியல் பயிற்சியில் சிம்பு ஈடுபட்டு வருகிறார். ‘பத்துதல’ படத்தின் தோற்றத்தில் இருந்தும் அவர் மாறி இருக்கிறார் எனும்போது சிம்புவின் புதிய கெட்டப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வர இருக்கிறார். ‘பத்துதல’ படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.