மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்ட யுவன்?: வைரலாகும் புகைப்படம்

மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்ட யுவன்?: வைரலாகும் புகைப்படம்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மெக்காவுக்குப் புனித பயணம் மேற்கொண்டதாக சொல்லப்படும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. கடைசியாக இவரது இசையில் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவுக்கு முன்பு ஏற்பட்டத் திருமண முறிவுகள் மற்றும் அவரது அம்மாவின் மறைவு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார்.

மேலும் தனது பெயரை அப்துல் காலிக் எனவும் மாற்றிக் கொண்டார். இதுமட்டுமல்லாது, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சஃப்ரூன் நிஷா என்பவரையும் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

இப்போது யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகக் கருதப்படும் மெக்கா மற்றும் மதினாவுக்கு ‘உம்ரா’ எனும் புனித யாத்திரை போயிருப்பதாக அவர் விமானத்தில் இருக்கும்படியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆனால், இதுப் பற்றி யுவன் ஷங்கர் ராஜா தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக செய்திகள் எதுவும் வரவில்லை. அண்ணா சாலையில் இருக்கும் தர்கா மற்றும் திருவல்லிக்கேணியில் இருக்கும் மசூதிக்கு அடிக்கடி செல்லும் வழக்கத்தை வைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in