இந்த விருதை அப்பாவுக்குச் சமர்ப்பிக்கிறேன்... நெகிழ்ந்த ஸ்ரீகாந்த் தேவா!

தேசிய விருது விழாவில் ஸ்ரீகாந்த் தேவா...
தேசிய விருது விழாவில் ஸ்ரீகாந்த் தேவா...

தான் பெற்ற தேசிய விருதை தனது அப்பாவுக்கு சமர்ப்பிப்பதாக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

'கருவறை' என்னும் குறும்படத்திற்கு இசையமைத்தமைக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக்கொண்டு திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த விருது குறும்படத்திற்காக வழங்கப்பட்டது. எனக்கு இந்த விருது கிடைத்ததற்காக எனது அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். ஜனாதிபதி கையில் விருது பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.

விமான நிலையத்தில் ஸ்ரீகாந்த் தேவா
விமான நிலையத்தில் ஸ்ரீகாந்த் தேவா

மேலும் அவர் பேசுகையில், "தமிழனாக இந்த விருதைப் பெற்றது பெருமையாக உள்ளது. இந்த விருது யாருக்காக டெடிகேட் பண்றீங்க என நேற்று எல்லோரும் கேட்டார்கள். இந்த விருதை எனது அப்பாவுக்காகச் சமர்ப்பிக்கிறேன். எனது அப்பா பெறாத விருதுகளே இல்லை. ஆனால் இந்த விருது அவருக்கு சிறப்பான ஒன்று.

எல்லா படத்திற்கும் விருது கிடைக்கும் என்றுதான் உழைக்கிறோம். எல்லா கலைஞர்களுக்கும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. நான் இந்தப் படம் செய்யும்போது தேசிய விருது கிடைக்கும் என நினைக்கவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in