
’ஜிகர்தண்டா2’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்டு அவர் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது, “திரையுலகில் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப கலைஞர்கள் இடையில் விவாதம் இருந்து கொண்டே இருக்கும். நாம் ஆசைப்பட்டு செய்ய வந்த படங்கள் சில சமயங்களில் தான் கிடைக்கும். அந்த மாதிரி படம் மக்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி.
கார்த்திக் சுப்பராஜ் மாதிரியான இயக்குநர் தொடர்ந்து ஒரே விஷயத்தை செய்யாமல், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் சினிமாவை செய்வார்கள். அவருடன் நானும் இருப்பது மகிழ்ச்சி. எங்கள் டீமில் இந்தப்படத்தின் இசைக்காக நிறைய உழைத்தோம். கார்த்திக் படம் மீண்டும் தியேட்டரில் எப்போது வரும் என காத்திருந்தோம். இந்தப்படத்தை இப்போது தியேட்டரில் மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!
சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!
அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!
குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!