ரெண்டு மாசம் தூங்கலை.. சந்திரமுகி 2 பற்றி இசையமைப்பாளர் கீரவாணி!

"'சந்திரமுகி2’ படத்தால் இரண்டு மாதம் தூங்கவில்லை”: இசையமைப்பாளர் கீரவாணி!
"'சந்திரமுகி2’ படத்தால் இரண்டு மாதம் தூங்கவில்லை”: இசையமைப்பாளர் கீரவாணி!
Updated on
1 min read

'சந்திரமுகி2’ படத்திற்காக இரண்டு மாதங்களாக தூங்காமல் இசையமைத்ததாக ஆஸ்கர் வென்ற கீரவாணி தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்காக, இரண்டு மாதங்கள் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி
இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி

அதில், 'சந்திரமுகி 2' படம் பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர். அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன். குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும்!’ என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்திற்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சந்திரமுகி2’ திரைப்படம் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in