அச்சச்சோ... என்னாச்சு? சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகத்தை மறக்கவே மாட்டேன்... வைரலாகும் டி.இமான் வீடியோ!

இசையமைப்பாளர் இமான்
இசையமைப்பாளர் இமான்

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் குறித்து இசையமைப்பாளர் டி.இமான் மனமுடைந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இசையமைப்பாளர் -நடிகர் என்ற வெற்றி காம்பினேஷன் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். அந்த வகையில், சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணியில் பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது. 'மனம் கொத்தி பறவை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' என சிவகார்த்திகேயனுடன் டி.இமான் இணைந்து பணியாற்றிய படங்களில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

சமீபத்தில் டி.இமான் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் குறித்து மனமுடைந்து பேசியுள்ளார். "சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை மறக்கவும் மாட்டேன். மன்னிக்கவும் மாட்டேன். நான் நெருக்கமாக பழகிய சிலரில் அவரும் ஒருவர். அவர் எனக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என் குழந்தைகள் என்னிடம் கேட்டால் மட்டும் சொல்வேன்" என்றார்.

மேலும், "இந்த ஜென்மத்தில் அவரின் படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன். அவரோடு இணைந்து பயணிப்பது என்பது சாத்தியமில்லை" என டி.இமான் கூறினார். அவரின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in