அட... `பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலில் இணையும் இளையராஜா மருமகள்!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்
Updated on
1 min read

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் விசாலினி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அண்ணன் - தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இதன் முதல் சீசன் இந்த வாரத்தோடு முடிவடைகிறது. கையோடு இந்த மாத இறுதியிலேயே அதாவது, அக்டோபர் 30ம் தேதியே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலும் தொடங்க இருக்கிறது. இதற்கான புரோமோவையும் விஜய் டிவி தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

இந்த சீசனில் மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலினே தொடர மற்ற நடிகர்கள் எல்லோருமே மாற்றப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக தனம் கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடிக்கிறார்.

’பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலில் விசாலினி
’பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலில் விசாலினி

முதல் சீசனில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் தற்போது படங்கள், வெப்சீரிஸ் என பிஸியாக இருப்பதால் அடுத்த சீசனில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் விசாலினி மூத்தமகள் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விசாலினி இதற்கு முன்பு ஜீ தமிழின் ’தவமாய் தவமிருந்து’ சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார். ’தவமாய் தவமிருந்து’ சீரியல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது விஜய் டிவியின் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in