இளையராஜா பயோபிக்: மலைக்க வைக்கும் பிரம்மாண்ட பட்ஜெட்!

தனுஷ், இளையராஜா.
தனுஷ், இளையராஜா.

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், படத்திற்கான பட்ஜெட் என்ன என்பது குறித்தானத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1980, 1990-ம் ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளராகக் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் இருந்து தமிழ் சினிமா திரையுலகில் நுழைந்து தன் இசையால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயம் கவர்ந்தவரின் வாழ்க்கைத் தற்போது படமாக உருவாகிறது. இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடிக்கப் போகிறார் என்ற செய்தி முன்பே வலம் வந்தது. இந்த நிலையில், இது தற்போது உறுதியாகி இருக்கிறது. இதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து இதற்காக தனுஷ் உரையாடி வருகிறார்.

இளையராஜா
இளையராஜா

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது நமக்குத் தெரியும். அவரின் பல பாடல்கள் தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது என்பதையும் அவர் கூறியிருக்கிறார். சமீபத்தில் கூட இளையராஜாவின் இசையில் ‘விடுதலை’ படத்தில் பாடல் பாடியது பற்றியும் மகிழ்ச்சியை தனுஷ் வெளிப்படுத்தினார். இப்போது படத்தின் பட்ஜெட் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ், இளையராஜா...
தனுஷ், இளையராஜா...

இந்தப் படத்தைத் தயாரிக்கும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமம் தென்னிந்தியத் திரைத்துறையில், மெகா ஸ்டார்களின் நடிப்பில் சுமார் 925 கோடி முதலீட்டில் பல பிரம்மாண்ட மெகா-பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளது. அதில் ஒன்று தான் இளையராஜாவின் பயோபிக். இதற்கான பட்ஜெட்டும் பிரம்மாண்டமாக இருக்கும் என்ற தகவல்தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in