
இசையமைப்பாளர் இளையராஜா தேனியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துக் கொடுத்து இருக்கிறார். இளையராஜாவின் பெயருடன் இருக்கும் இந்த மின்விளக்கு கோபுர கல்வெட்டு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தனது சொந்த மாவட்டமான தேனியில் கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைத்திருக்கிறார் இளையராஜா. நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து இந்த மின்விளக்கு கோபுரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது எம்.பி பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.