நடிகர் சிவகார்த்திகேயன் பிரச்சினை... முதல் முறையாக மனம் திறந்த டி.இமான்!

இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி.இமான்

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் இமான் சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்த அதுகுறித்து முதல் முறையாக இசையமைப்பாளர் டி.இமான் மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயன் தங்கள் குடும்பத்தைச் சேர்த்து வைக்க முயற்சித்ததையே இமான் அவ்வாறு கூறியுள்ளார் எனப் பேட்டி கொடுத்தார். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக மோனிகா இவ்வாறு பேசியது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் டி.இமான்
முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் டி.இமான்

மேலும் நடிகை குட்டி பத்மினி, சீரியல் நடிகர் தீபக் என திரையுலகில் பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், டி.இமானுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் படபூஜை ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமானிடம் இந்தப் பிரச்சினைக்குப் பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வையுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

சிவகார்த்திகேயனுடன் இமான்
சிவகார்த்திகேயனுடன் இமான்

அதற்கு இமான் கூறுகையில், “இதில் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை. சரி, தவறு எது என்பது மனிதர்களைத் தாண்டி இறைவனுக்கு தெரியும் என்பதை நம்புவன் நான். இது எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in