விதவை அல்லது விவாகரத்தான பெண்: மறுமணம் பற்றி டி.இமான்

விதவை அல்லது விவாகரத்தான பெண்: மறுமணம் பற்றி டி.இமான்

இசை அமைப்பாளர் டி.இமான் தனது மறுமணம் குறித்து இப்போது மனம் திறந்துள்ளார்.

இசை அமைப்பாளர் டி.இமான் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை விவாகரத்து செய்வதாக நவம்பர் மாதம் அறிவித்தார். தற்போது அவர் மறுமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து இமான் கூறுகையில், ``எனக்கு மனைவியாக வருபவர், என் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். சிங்கிள் மதராக இருக்க வேண்டும். விதவை அல்லது விவாகரத்தான பெண், குறிப்பாக ஏழு அல்லது எட்டு வயதில் பெண் குழந்தை இருப்பவராக பாருங்கள் என்று வீட்டில் சொல்லியிருக்கிறேன். தற்போது என் மகள்களுக்கு 11 வயதும், 9 வயதும் ஆகிறது. அவர்களுக்கு ஒரு குட்டி தங்கை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் குழந்தைக்கும் நான் நல்ல தகப்பனாக இருப்பேன்'' என்றார்.

Related Stories

No stories found.