புஷ்பா 2... படத்தின் டைட்டிலை வைத்தே பாட்டுப் போட்டு ஹிட்டாக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்!

புஷ்பா 2... படத்தின் டைட்டிலை வைத்தே பாட்டுப் போட்டு ஹிட்டாக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்!
1.

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் இருந்து ‘புஷ்பா புஷ்பா’ பாடல் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ‘புஷ்பா’ என படத்தின் டைட்டிலையே பாட்டாக வைத்து இசையமைத்திருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (டிஎஸ்பி). ‘புஷ்பா’ மட்டுமல்லாது இதற்கு முன்பு அவர் எந்தெந்த படங்களுக்கு இதுபோல பாடல் அமைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

2. 'புஷ்பா2’:

’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...
’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா1’ வெற்றிப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறது. படத்திற்கான புரமோஷன் தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று படத்தில் இருந்து முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது.

இதில் கதாநாயகன் அல்லு அர்ஜூனின் கதாபாத்திரப் பெயர் மற்றும் படத்தின் டைட்டிலான ‘புஷ்பா’ என்ற வார்த்தையை வைத்தே ‘புஷ்பா...புஷ்பா...’ என்ற பாடலை அமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

3. ’கங்குவா’:

கங்குவா
கங்குவா

சிறுத்த சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ’கங்குவா’ படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசை. கிளிம்ப்ஸ், டீசர் என வெளியாகியுள்ள இந்தப் படத்தின் புரமோஷன்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதிலும் படத்தின் டைட்டிலான ‘கங்குவா’ என்பதை வைத்தே ‘கங்கா... கங்கா... கங்குவா’ என்ற பாடலை வைத்திருக்கிறார் டிஎஸ்பி. இதற்கு முன்பு சூர்யாவின் ‘சிங்கம்’ படத்திலும் ‘சிங்கம்... சிங்கம்...’ என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் டிஎஸ்பி.

4. ’வில்லு’: 

விஜய் நடிப்பில் வெளியான ‘வில்லு’, ‘புலி’ போன்ற படங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை. இந்தப் படங்களிலும் ‘வில்லு வில்லு’, ‘புலி புலி புலி’ என படத்தின் டைட்டிலை வைத்தே பாடல்களைப் போட்டிருப்பார்.

5. ’கந்தசாமி’: 

விக்ரம், ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் ‘கந்தசாமி’. இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. இந்தப் படத்திலும் ஹீரோ விக்ரமின் கதாபாத்திரத்திற்கான தீம் பாடலாக ‘கந்த கந்த கந்த கந்தசாமி...’ என்ற பாடலை இசையமைத்துப் பாடியிருப்பார் தேவி ஸ்ரீ பிரசாத்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in