இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்: திரையுலகினர் வாழ்த்து!

இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்: திரையுலகினர் வாழ்த்து!

இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2008-ல் மோனிகா ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை விவாகரத்து செய்வதாக நவம்பர் மாதம் இமான் அறிவித்தார். இதையடுத்து அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மணமக்களுடன் சங்கீதா, குட்டி பத்மினி, கிரீஷ்
மணமக்களுடன் சங்கீதா, குட்டி பத்மினி, கிரீஷ்

இதுகுறித்து பேசியிருந்த இமான், ’எனக்கு மனைவியாக வருபவர், என் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்க வேண்டும். விதவை அல்லது விவாகரத்தான பெண், குறிப்பாக ஏழு அல்லது எட்டு வயதில் பெண் குழந்தை இருப்பவராகப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன். தற்போது என் மகள்களுக்கு 11 வயதும், 9 வயதும் ஆகிறது. அவர்களுக்கு ஒரு குட்டி தங்கை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் குழந்தைக்கும் நல்ல தகப்பனாக இருப்பேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இமானுக்கு இன்று மறுமணம் நடந்துள்ளது. மணமகள் பெயர் எமிலி. இவர் கலை இயக்குநர் உபால்டுவின் மகள். இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகைகள் சங்கீதா, குட்டி பத்மினி, பாடகர் கிரீஷ் ஆகியோரும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இமான் - எமிலி திருமணப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்!

Related Stories

No stories found.