தனுஷூடன் மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்?

தனுஷ் & ரஹ்மான்
தனுஷ் & ரஹ்மான்மீண்டும் இணையும் கூட்டணி?

நடிகர் தனுஷின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இசையமைக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ் ‘வாத்தி’ பட வெளியீட்டிற்குப் பிறகு தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இதற்கடுத்து தனுஷ் இயக்கத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். குறிப்பாக, அவரது ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அந்த கதையை அவரே இயக்குவார் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. #D50 என்ற ஹேஷ்டேக்குடன் தனுஷ் படத்தைத் தயாரிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தனுஷ் இயக்கத்தில், கடந்த 2016-ல் வெளியான ‘பவர் பாண்டி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கடுத்து, ‘ராயன்’ என்ற படத்தை தனுஷ் இயக்க அந்தப் படம் சில காரணங்களால் பாதியில் நின்றது. இப்போது, தனது 50-வது படத்தை தனுஷ் இயக்க, அதில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் பங்களிப்பு இருக்கும் எனவும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, தனுஷ்-ரஹ்மான் கூட்டணியில் ‘மரியான்’, ‘ராஞ்சனா’, ‘அட்ரங்கி ரே’ போன்ற படங்கள் வெளியானது. மேலும், இந்தப் படத்தில் தனுஷ் உடன் விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டப் பலர் நடிக்க இருக்கின்றனர். இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in