ரஜினியின் `பாபா’ படத்தில் நடித்திருக்கும் அனிருத்?

ரஜினியின் `பாபா’ படத்தில் நடித்திருக்கும் அனிருத்?

நடிகர் ரஜினியின் ‘பாபா’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் நடித்திருக்கும்படியான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2002-ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘பாபா’. இந்தப் படம் மீண்டும் டிஜிட்டலாக மறு வெளியீடு செய்யப்படுகிறது என கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ’3’ படத்தில் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமாகி இருந்தாலும் அவர் அதற்கு முன்பே அவர் ‘பாபா’ படத்தில் நடித்திருக்கிறார் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தின் போஸ்டரில் அனிருத் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ’பாபா’ படத்தில் இசை மற்றும் ரீமிக்ஸ் போன்ற விஷயங்கள் அப்டேட் செய்து டிஜிட்டலாக வெளியீடு செய்யப் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. ’பாபா’ படத்தை ரீ- ரிலீஸ் செய்வதற்கான ஐடியாவை நடிகர் ரஜினிகாந்த் கொடுத்துள்ளதாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in