'லியோ' படப்பாடலும் காப்பி... அனிருத்தை சுற்றி வரும் சர்ச்சை!

அனிருத்
அனிருத்

'லியோ' படத்தின் இசை காப்பி என எழுந்துள்ள தகவலால் அனிருத் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவரது இசையில் சமீபத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் இசைதான் காப்பி என தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. லியோ படத்தின் ‘ஆர்டனரி பர்சன்’ என்கிற பாடல், ஐரோப்பிய இசையமைப்பாளர் பாடலிலிருந்து நகல் எடுக்கப்பட்டது என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சர்ச்சையில் சிக்கிய லியோ பாடல்...
சர்ச்சையில் சிக்கிய லியோ பாடல்...

ஐரோப்பிய இசையமைப்பாளர் ஒட்னிகா என்பவரின் ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஒட்னிகா. இவர் இசையமைத்து வெளியிட்ட ஆல்பம் `வேர் ஆர் யூ’.

இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல், பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகிய ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ என்ற இணையத்தொடரில் ‘ஐ ஆம் நாட் அவுட்சைடர்’ பாடலாகப் பயன்படுத்தப்பட்டது. இதை ரசிகர்கள் குறிப்பிட்டு அனிருத்தை வறுத்தெடுக்க அதற்கு ஒட்நிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஒட்னிகாவின் விளக்கம்...
இசையமைப்பாளர் ஒட்னிகாவின் விளக்கம்...

அவர் பகிர்ந்துள்ளதாவது, 'நண்பர்களே, 'லியோ' திரைப்படம் குறித்து நீங்கள் எனக்கு அனுப்பிய மெசேஜ்களுக்கு நன்றி. மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து தளங்களிலும் அந்த பாடலைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகிறீர்கள். எல்லாவற்றையும் பார்த்தேன். அவற்றிற்கெல்லாம் தனித்தனியாக என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இந்த சர்ச்சைகள் குறித்து எனக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கச் சிறிது நேரம் கொடுங்கள். அதுவரை நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை" என்று பதிவிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in