பக்தர்களோடு பக்தராக நின்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த இளையராஜா!

மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா
மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா

மதுரையில் நாளை 'இசையென்றால் இளையராஜா' நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் இன்று மதுரை வந்த இசை அமைப்பாளர் இளையராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழின் முன்னனி இசை அமைப்பாளரான இளையராஜாவின் 'இசையென்றால் இளையராஜா' என்ற இசை நிகழ்ச்சி மதுரையில் நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே, சென்னை மற்றும் கோவையில் அவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், மதுரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக மதுரை மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

சாமி தரிசனம் செய்த இளையராஜா
சாமி தரிசனம் செய்த இளையராஜா

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜா மதுரை வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பக்தர்களோடு பக்தராக நின்று சாமி தரிசனம் செய்த இளையராஜா, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என மொத்தமாக சுமார் 1 மணி நேரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in