பிரபல நடிகையுடன் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணமா?

பிரபல நடிகையுடன் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணமா?

இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பிரபல நடிகையுடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை அந்த நடிகை மறுத்துள்ளார்.

தமிழில் ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’, ‘வீரம்’, ‘தி வாரியர்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார். ’புஷ்பா’ படத்தில் அவர் இசை அமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இவர் சில நடிகைகளுடன் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டார்.

இப்போது தெலுங்கு நடிகை புஜிதா பொன்னடா (Pujita Ponnada)வை அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாயின. கடந்த ஒரு மாதமாக இந்த செய்திகள் பரபரப்பாக வெளியான நிலையில், இதை நடிகை புஜிதா இப்போது மறுத்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகக் கூறுவதும் பொய். இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.

நடிகை புஜிதா பொன்னடா, ரங்கஸ்தலம், ஹேப்பி வெட்டிங், கல்கி உட்பட பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’செவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ’பகவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in