இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தானா?

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தானா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்கும் ஹீரோ முடிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ், இவர் கடைசியாக ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ’தர்பார்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. கதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்தப் படம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அவர் இப்போது படம் இயக்க தயாராகி உள்ளார். அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மும்பை நிறுவனம் ஒன்று இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு இப்போது, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள, ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது எழுத்தாளர் ஜெயமோகனின் ’ஐந்து நெருப்பு’ என்ற கதையை தழுவி உருவாகும் படம். செப்டம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கருடன் 'பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in