`மிடில் கிளாஸ்’ மூலம் ஹீரோ ஆகிறார் முனிஷ்காந்த்!

`மிடில் கிளாஸ்’ மூலம் ஹீரோ ஆகிறார் முனிஷ்காந்த்!

’மிடில் கிளாஸ்’ படத்தில் நடிகர் முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

காமெடி மற்றும் குணசித்திரப் படங்களில் நடித்து வரும் முனிஷ்காந்த், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ’மிடில் கிளாஸ்’. இந்தப் படத்தை மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு தயாரிக்கிறார்.

இதில் விஜயலட்சுமி அகத்தியன் நாயகியாக நடிக்கிறார். ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன் , குரைஷி உட்பட பலர் நடிக்கின்றனர்.

மிடில் கிளாஸ் படக்குழு
மிடில் கிளாஸ் படக்குழு

நடுத்தரக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, பொழுதுபோக்குப் படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்குகிறார். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in