விஷ்ணு விஷாலுடன் 3-வது முறையாக இணையும் 'முண்டாசுப்பட்டி' இயக்குநர்!

விஷ்ணு விஷாலுடன் 3-வது முறையாக இணையும் 'முண்டாசுப்பட்டி' இயக்குநர்!

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்துள்ளார்.

’முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராம்குமார். இந்தப் படங்கள் நடிகர் விஷ்ணு விஷாலின் சினிமாப் பயணத்திலும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்த நிலையில், இவர்கள் தற்போது மூன்றாவது முறையாக ஒரு படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ராம்குமார் பேசுகையில், ‘’முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் ஜானரில் இருந்து இதுமுற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இந்தப் படம் ரொமான்ஸ் ஜானரில் அமைந்திருக்கும்.

‘ராட்சசன்’ படம் முடித்தப் பிறகு அதே போன்றதொரு ஜானரைக் கையாள விரும்பவில்லை. அப்போதுதான் இந்த கதை எடுக்க சரியான நேரம் இது என நினைத்தேன். இந்தக் கதையை நான் விஷ்ணுவிடம் சொன்னபோது உடனே கதையையும் அதன் உணர்வுகளையும் புரிந்து கொண்டார். இது படப்பிடிப்புத் தொடங்கும்போது நிச்சயம் உதவும். ’முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களில் நடித்த முனீஷ்காந்த் இந்தப் படத்திலும் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு வருகிற ஏப்ரல்- மே மாதத்தில் தொடங்க இருக்கிறது’ என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in