சிறையில் இருந்து வந்ததும் மருத்துவமனையில் நடிகை அட்மிட்: கணவரைக் கண்டதும் கண்ணீர்

சிறையில் இருந்து வந்ததும் மருத்துவமனையில் நடிகை அட்மிட்: கணவரைக் கண்டதும் கண்ணீர்

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நடிகை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கணவரைக் கண்டதும் கண்ணீர் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மும்பையை சேர்ந்தவர் நவ்நீத் கவுர். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் விஜய்காந்தின் அரசாங்கம், கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி படங்களில் நாயகியாக நடித்துள்ளார். பின்னர் மகாராஷ்டிராவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்போது, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக இருக்கிறார் நவ்நீத் கவுர். இவரும் இவர் கணவர் ரவி ராணாவும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் சாலீசா (அனுமன் மீது பாடப்படும் பக்திப் பாடல்கள்) பாடப்போவதாக இவர்கள் அறிவித்தனர். இதற்கு சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மும்பை போலீஸார் அவர்களை கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்து சிறையில் அடைந்தனர். நேற்று அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மும்பை, பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட நவ்நீத், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவர் உயர் ரத்த அழுத்தம், உடல்வலி, முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் கணவரும் எம்.எல்.ஏவுமான ரவி ராணா, அவரை மருத்துவமனையில் சந்தித்தார். அப்போது நவ்நீத் கவுர் கண்ணீர்விட்டார். அவரை ரவி தேற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

இதுபற்றி கூறிய ரவி ராணா, ’’ஆறு நாட்களாக தனது உடல் நிலை சரியில்லை என்றும் மருத்துவமனை செல்ல வேண்டும் என்றும் நவ்நீத் கூறியதை, சிறை அதிகாரிகள் ஏற்கவில்லை. அதனால் அவர் உடல் நிலை மோசமானது’’ என்று குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in