எம்எல்ஏ கணவருடன் முதல்வர் வீட்டு முன் போராட சென்ற கருணாஸ் பட நடிகை கைது

ரவி ரானா, நவ்நீத் கவுர் ரானா
ரவி ரானா, நவ்நீத் கவுர் ரானா

முதல்வர் வீட்டு முன் அனுமன் பாடல்களை பாட முயன்ற கருணாஸ் பட நடிகை, அவர் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

மும்பையை சேர்ந்தவர் நவ்நீத் கவுர். தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் விஜய்காந்தின் அரசாங்கம், கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி படங்களில் நாயகியாக நடித்துள்ளார். பின்னர் மகாராஷ்டிராவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ரானாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக இருக்கிறார் நவ்நீத் கவுர் ரானா. இவரும் இவர் கணவர், பட்னேரா தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ரவி ரானாவும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

 நவ்நீத் கவுர் ரானா
நவ்நீத் கவுர் ரானா

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் சாலீசா ( அனுமன் மீது பாடப்பட்ட பக்திப் பாடல்கள்) பாடப்போவதாக இவர்கள் அறிவித்தனர். இதற்கு சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து மும்பை போலீஸார் அவர்களை கைது செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், மத விரோதத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மும்பை பாந்த்ராவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ரவி ரானா, நவ்நீத் கவுர் ரானா
ரவி ரானா, நவ்நீத் கவுர் ரானா

அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நவ்நீத் கவுர் மும்பை பைகுல்லா பெண்கள் சிறையிலும் அவர் கணவர் ரவி ரானா நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை 29-ஆம் தேதி நடக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in