நடிகை மெளனி ராய் திருமணம்: காதலரை கரம் பிடித்தார்

தொழிலதிபர் சுராஜ் நம்பியார், நடிகை மெளனி ராய்
தொழிலதிபர் சுராஜ் நம்பியார், நடிகை மெளனி ராய்

’நாகினி’ தொடர் நடிகை மெளனி ராய் திருமணம் கோவாவில் இன்று காலை நடந்தது.

பிரபல இந்தி நடிகை மெளனி ராய். சின்னத்திரையிலும் நடித்து வந்த இவர், ’நாகினி’ தொடரில் ஷிவானியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தத் தொடர் தமிழ் உட்பட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதால், இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக, இளைஞர்கள் அதிகம் இந்த சீரியலை விரும்பிப் பார்த்ததற்கு மெளனி ராயும் காரணம் என்பார்கள்.

இவரும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரும் காதலித்து வந்தனர். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். துபாய் அல்லது இத்தாலியில் திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், கோவாவில் இவர்கள் திருமணம் இன்று(ஜன.27) காலை நடைபெற்றது.

கேரள முறைப்படியும் வங்காள கலாச்சாரப்படியும் இவர்கள் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இவர்கள் திருமணம் நடந்தது. திருமணப் புகைப்படங்களை நடிகை மெளனி ராய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in