தனுஷின் ‘ரவுடி பேபி’க்கு நடனமாடிய மெளனி ராய்!

தனுஷின் ‘ரவுடி பேபி’க்கு நடனமாடிய மெளனி ராய்!
தொழிலதிபர் சுராஜ் நம்பியார், நடிகை மெளனி ராய்

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை மெளனி ராய், தனுஷின் 'ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரபல இந்தி நடிகை மௌனி ராய். ‘நாகினி’தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமடைந்தார். இந்த தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தென்னிந்திய ரசிகர்களிடமும் அவர் பிரபலமடைந்தார்.

இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி கோவாவில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். திரையுலக பிரபலங்களான அர்ஜுன் பிஜ்லானி, மந்திரா பேடி, மன்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்தனர்.

மணமகன் சுராஜ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், திருமணம் கேரள முறைப்படியும் பின்னர் பெங்காலி முறைப்படியும் நடைபெற்றது.

இந்நிலையில் திருமண வரவேற்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகை மெளனி ராய், சில பாடல்களுக்கு நடனமாடினார்.

தமிழில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ’ரவுடி பேபி’ பாடலுக்கு அவரும் சுராஜும் நடனமாடினர். தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ’மாரி 2’ படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. யுவன் சங்கர் இசையில் வெளியான இந்தப் பாடல், யூடியூபில் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in