நயன்தாராவைப் பாராட்டிய மாமியார்: வைரல் வீடியோ!

நயன்தாராவைப் பாராட்டிய மாமியார்: வைரல் வீடியோ!

நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் அம்மா பாராட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இருவரும் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில், விக்னேஷ்சிவனின் தாய் மீனாகுமாரி சமீபத்தில் கொடுத்தப் பேட்டி ஒன்றில் நடிகையும் தன் மருமகளான நயன்தாராவைப் பாராட்டிப் பேசியுள்ள இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு என பொறுப்பான பெண்களை நியமித்து இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், சமையல், துணிதுவைக்க, வீட்டில் மற்ற வேலைகள் செய்வதற்கு என மொத்தம் எட்டு பேர் வேலைக்கு வைத்திருக்கிறோம். இதில் நீண்ட காலமாக வேலை செய்து கொண்டு ஒரு அம்மா வீட்டிற்குச் சென்ற போது அவருக்கு நான்கு லட்ச ரூபாய் கடன் இருக்கிறது எனத் தெரிய வந்தது. இதனை அறிந்த நயன்தாரா உடனே அவருக்கு நான்கு லட்ச ரூபாயைக் கொடுத்து அவரது கஷ்டத்தைப் போக்கினார்.

இதேபோல தான் நயன்தாரா அம்மாவும் பிறருக்கு உதவக்கூடிய குணம் கொண்டவர்” என்று விக்னேஷ் சிவன் அம்மா தன் மருமகளையும், அவரது அம்மாவையும் புகழ்ந்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்காகத் தற்போது நடிப்பிற்கு பிரேக் எடுத்துள்ளார் நயன்தாரா. அவர் நடித்து ‘கோல்டு’, ‘கனெக்ட்’ ஆகியத் திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in