ஏப்ரல் 1-ல் ரிலீஸ் ஆகிறது ‘மோர்பியஸ்’

ஏப்ரல் 1-ல்  ரிலீஸ் ஆகிறது ‘மோர்பியஸ்’
மோர்பியஸ் படத்தில் ஜாரெட் லெடோ

சோனி நிறுவனம் தயாரித்துள்ள ‘மோர்பியஸ்’ படம், ஏப்ரல் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’, ‘அன்சார்டட்’ ஆகிய படங்கள் உலகமெங்கும் வரவேற்பை பெற்றது. இப்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி இருக்கும், ‘மோர்பியஸ்’ (Morbius) திரைப்படம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படம் மூலம் மார்வல் கதாப்பாத்திரங்களில் முக்கியமான, சிக்கலான, மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் ரத்தம் சம்பந்தப்பட்ட விநோத நோயால் பாதிக்கப்படுகிறார். அவருக்குள் புகும் இருள் சக்தியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் திரைக்கதை.

 ‘மோர்பியஸ்’ ஜாரெட் லெடோ
‘மோர்பியஸ்’ ஜாரெட் லெடோ

படத்தை, டேனியல் எஸ்பினொசா இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஜாரெட் லெடோ (Jared Leto) இப்படத்தில் மோர்பியஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மாட் ஸ்மித், அட்ரியா அர்ஜோனா, ஜேர்ட் ஹாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘டை ஹார்ட் 2’, உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆலிவர் வுட் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் குறித்து, “உடலை முழுமையாக மாற்றும் பாத்திரங்கள் மீது எனக்கு தனித்த ஈர்ப்புண்டு. இந்தக் கதாப்பாத்திரம் மனதளவிலும், உடலளவிலும் பெரும் சவாலை எடுத்துக்கொண்டது. படம் ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் ஜாரெட் லெடோ .

இந்தப் படம் ஒரே சமயத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.