தமிழ், தெலுங்கில் படம் இயக்கும் ’மூடர் கூடம்’ நவீன்

தமிழ், தெலுங்கில் படம் இயக்கும் ’மூடர் கூடம்’ நவீன்

’அக்னிச் சிறகுகள்’ படத்தை இயக்கியுள்ள நவீன், அடுத்து இரண்டு மொழியில் உருவாகும் படத்தை இயக்க இருக்கிறார்.

’மூடர் கூடம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் நவீன். அடுத்து, ஆனந்தி நடித்த ’அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் வெளிவரவில்லை. இப்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், ரைமா சென் உட்பட பலர் நடித்துள்ள ’அக்னிச் சிறகுகள்’ படத்தை இயக்கியுள்ளார்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

’மூடர் கூடம்’ நவீன்
’மூடர் கூடம்’ நவீன்

இதையடுத்து ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்குப் படம் இயக்க இருக்கிறார், நவீன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கில் அறிமுகமான ஹீரோ ஒருவர் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in