`எச்சரிக்கையாக இருங்கள்; ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல'- பணமோசடி குறித்து விஜய் டிவி விளக்கம்

`எச்சரிக்கையாக இருங்கள்; ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல'- பணமோசடி குறித்து விஜய் டிவி விளக்கம்

விஜய் டிவியின் பெயரில் மோசடிகள் நிகழ்வதாக வந்த புகார்களை அடுத்து அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, பிக்பாஸ் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புகழ்பெற்றவை. சமீபத்தில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதாக வந்த போலியான அழைப்புகளை நம்ப வேண்டாம் என சொல்லி அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், ‘எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதாக டிஸ்னி ஸ்டார் மற்றும் ஸ்டார் விஜய் அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனம் பணம் கேட்பதில்லை. மேலும், எங்கள் நிறுவனத்தில் ஒளிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை பணம் செலுத்தியோ அல்லது வேறு வகையிலோ வழங்கவோ செயல்படுத்தவோ நாங்கள் அங்கீகரிக்கவில்லை.

ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இந்த போலியான அழைப்புகள் மற்றும் இந்த அலைவரிசையின் பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு நிகழ்ச்சியிலாவது நடிக்கவோ தோன்றவோ வாய்ப்பை உறுதியளித்து தனிப்பட்ட தகவல்களையோ புகைப்படங்களையோ காட்சித் துணுக்குகளையோ அல்லது பணத்தையோ கோருபவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய தவறான நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் உங்களால் செலுத்தப்பட்ட பணம் அல்லது பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்பட்ட மற்றும் அல்லது ஏற்படக்கூடிய எந்த விதமான இழப்பு, சேதம் ஆகியவற்றுக்கு இந்த நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in