‘நீண்ட நாள் எதிர்பார்ப்பு... நீல் தந்த நிம்மதி’ - நெகிழும் காஜல்

‘நீண்ட நாள் எதிர்பார்ப்பு... நீல் தந்த நிம்மதி’ - நெகிழும் காஜல்

நேற்று முன்தினம் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவரது தங்கை நிஷா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். குழந்தைக்கு ‘நீல் கிச்சுலு’ என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது காஜல் அகர்வால் தனது குழந்தை பற்றியும் பிரசவ நேர அனுபவங்கள் பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்.

‘எனது மகன் நீல் கிச்சுலுவை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியும் பரவசமும் அடைகிறேன். நீல் பிறந்த நிகழ்வு பரவசமும் உற்சாகமும் மகிழ்ச்சி ஊட்டுவதாகவும் நாங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த ஒன்றாகவும் இருந்தது. நீல் பிறந்ததும் அவனை என் மார்பில் அணைத்துக்கொண்ட அந்த நொடியில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வினை அடைந்தேன். அந்த நொடியில் உண்மையான அன்பின் ஆழத்தையும் பொறுப்புணர்வையும் ஒரே சமயத்தில் உடலளவிலும் மனதளவிலும் உணர்ந்தேன்’ என அந்தப் பதிவில் காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘நிச்சயமாகக் கடந்த மூன்று இரவுகளாக நான் சரியாக உறங்கவில்லை. அதிகாலைகளில், ரத்தக் கசிவும் இருந்தது. துர்நாற்றம், அடிவயிறு பிசையும் வலி, தோல் சுருக்கம், இரத்தம் உறைந்த நாப்கின்கள், மார்பக்கத்தின் பால், நிச்சயமின்மை, நிரந்தர கவலை, அனைத்தையும் சரியாகச் செய்தாலும் எதோ ஒரு பயம் போன்றவை பிரசவத்தின்போது நிச்சயம் இருக்கும்.

ஆனாலும், இது மட்டுமல்ல. காலையில் எழும்போது அந்தக் குழந்தையின் அன்பான அணைப்பு, ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக்கொள்ளும் தருணங்கள், அன்பான சிறு முத்தங்கள் என முழுக்க முழுக்கவே அது எங்களுக்கான நேரமாக இருக்கும். கற்றுக்கொள்வது, வளர்வது, புதிய விஷயங்களை அடைவது என இனி ஒவ்வொரு நாளும் எங்களுடைய பயணம் இனிதாகவே இருக்கப்போகிறது.

உண்மையில், பிரசவத்திற்குப் பின்பு கவர்ச்சி என்பது இருக்குமா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது ஆனால், கண்டிப்பாக அழகான விஷயமாக இருக்கும் என்பது நிச்சயம்’ என அந்தப் பதிவில் கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.

Related Stories

No stories found.