அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்!

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்!

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அஜித்குமார், ’வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹூமா குரேஸி ஹீரோயினாக நடித்துள்ளார். மற்றும் கார்த்திகேயா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். கரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மோகன்லால், அஜித்குமார்
மோகன்லால், அஜித்குமார்

இந்நிலையில், அஜித்குமார் நடிக்கும் அடுத்தப் படத்தையும் (AK61) ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் ஐதராபாத்தில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தி நடிகை தபு, அஜித் ஜோடியாக நடிக்கிறார். 22 வருடத்துக்குப் பிறகு அவர் அஜித்துடன் மீண்டும் இணைகிறார்.

இதற்கிடையே, இந்தப் படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மோகன்லால் நடித்த ’மரைக்காயர்’ படத்தில் செட்டுக்கு அஜித் சென்ற வீடியோவை, அந்த படக்குழு, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்ட நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in