
நடிகர் ரஜினிகந்த்தின் ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் கைகோர்த்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்திய தகவல்களின்படி நடிகர் மோகன்லால் ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கான படப்பிடிப்பு இந்த மாதம் 8-ம் தேதியில் இருந்து துவங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாத நிலையில், இதை படக்குழு உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதற்கடுத்து இவரது படத்தை இயக்க ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் பிரதீப் ரங்கநாதன் பெயர்கள் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.