பாதியில் நின்ற த்ரிஷாவின் படம் மீண்டும் தொடக்கம்!

பாதியில் நின்ற த்ரிஷாவின் படம் மீண்டும் தொடக்கம்!

த்ரிஷா நடிப்பில் நின்றுபோன படம் மீண்டும் தொடங்க இருக்கிறது.

ஜீத்து ஜோசப், மோகன்லால் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடிக்கும் 'ராம்' என்கிற படத்தினை இயக்கி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தின் ஷூட்டிங் டெல்லி, லண்டன், கொழும்பு, உஸ்பெகிஸ்தான், கெய்ரோ போன்ற பல இடங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. கரோனா காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஜீத்து ஜோசப், த்ரிஷா, மோகன்லால்
ஜீத்து ஜோசப், த்ரிஷா, மோகன்லால்

பின்னர் ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் ’ட்வெல்ஃப்த் மேன்’ (12th man) என்ற படத்தில் இணைந்தனர். இந்தப் படம் இப்போது ரிலீஸ் ஆகிவிட்டது. அதே நேரம் கரோனாவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், ராம் படத்தை மீண்டும் தொடங்க உள்ளனர். ஜூன் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணு ஷ்யாம் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா மருத்துவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in