3 வருடத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது த்ரிஷா நடிக்கும் படம்!

3 வருடத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது த்ரிஷா நடிக்கும் படம்!

த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மூன்று வருடத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கி இருக்கிறது.

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். பிறகு இதை தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்தப் படமும் மெகா ஹிட்டானது. இதையடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் 'தம்பி' படத்தை இயக்கினார். இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் ’த்ரிஷ்யம்’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்கினார். அதுவும் ஹிட்டானது.

ஜீத்து ஜோசப், த்ரிஷா, மோகன்லால்
ஜீத்து ஜோசப், த்ரிஷா, மோகன்லால்

இதற்கிடையில் மோகன்லால், த்ரிஷா நடிப்பில் ’ராம்’ என்ற படத்தை அவர் ஆரம்பித்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டி இருந்ததால், கரோனா பரவல் காரணமாக அந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் த்ரிஷ்யம் 2 படத்தை இயக்கினார் ஜீத்து ஜோசப். பிறகு மோகன்லால் நடிப்பில் ட்வெல்த் மேன் என்ற படத்தை இயக்கினார். இது ஓடிடியில் வெளியானது.

இந்நிலையில் ’ராம்’ படத்தை ஜீத்து ஜோசப் மீண்டும் தொடங்கியுள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. 8 முதல் 10 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் ஜீத்து ஜோசப், மூன்று வருடத்துக்குப் பிறகு ராம் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. உங்களின் ஆதரவும் வாழ்த்துகளும் தேவை என்று இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in