மீண்டும் நடிக்க வரும் மோகன்

இயக்குநர் விஜய் ஸ்ரீயின் ஹரா படத்தில் நடிக்கிறார்
மீண்டும் நடிக்க வரும் மோகன்
மோகன்

மைக் மோகன் என தமிழ்த் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார். நிகில் முருகனை வைத்து ‘பவுடர்’ படத்தை இயக்கிய இயக்குநர் விஜய் ஸ்ரீயின் அடுத்த படமான ‘ஹரா’ மூலமாக மீண்டும் நடிக்க வருகிறார் மோகன்.

தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த போதும் சரியான கதாபாத்திரமும் கதையும் அமையட்டும் என்று காத்திருந்தார் மோகன். இதனால், இடையில் தன்னைத் தேடிவந்த குணச்சித்திர வேடங்களை எல்லாம் தவிர்த்தார். இந்த நிலையில், 'பவுடர்' படத்தின் டீசரை பார்த்துவிட்டு இயக்குநர் விஜய் ஸ்ரீயிடம் ஹரா படத்தில் நடிக்க சம்மதித்தாராம் மோகன்

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பிள்ளைகளுக்கு முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற வாதம் வலுத்து வரும் இந்தக் காலத்தில். இந்திய தண்டனைச் சட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு சிறுவயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படம் பேசப்போகும் மெசேஜ் என்கிறார்கள்.

Related Stories

No stories found.