நடிகர் வடிவேலு வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.அழகிரி

நடிகர் வடிவேலு வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.அழகிரி

நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி மறைவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் திரையுலகில் 1988-ம் ஆண்டு 'என் தங்கை கல்யாணி' படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. அவரின் மதுரை வட்டாரப் பேச்சு வழக்கும், உடல் அசைவும் தமிழ் திரையுலகில் அவருக்கு தனி இடத்தை வழங்கியது. இதன் காரணமாக பல்வேறு படங்களில் காமெடி நடிகராக வடிவேலு நடித்தார்.

அத்துடன் கதாநாயகன்களுக்கு இணையான ரோல்களில் வடிவேலு நடித்து வந்தார். இந்த நிலையில், ஹீரோவாக பல படங்களில் நடித்தார். கரோனா காலத்தில் திரையுலகில் இருந்து நடிகர் வடிவேலு விலகியிருந்தார். இந்த நிலையில் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் நடிகர் வடிவேலு தற்போது ரீஎண்டரி கொடுத்துள்ளார்.

மதுரை விரகனூர் பகுதியில் தாய் சரோஜினியுடன் வடிவேலு வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவால் சரோஜினி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, வடிவேலு வீட்டிற்கு இன்று நேரில் சென்று சரோஜினி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் பின் வடிவேலுவிற்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in